Mutual Fund நிறுவனங்களின் சொத்து மதிப்பு கிடுகிடு உயர்வு..!

11 February 2020, 1:08 pm
Mutual fund -updatenews360
Quick Share

Mutual Fund நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இது குறித்து mutual fund நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி கூறியிருப்பதாவது :- கடந்த ஜனவரி மாதம் Mutual Fund துறையில் 44 நிறுவனங்களின் வாயிலாக, கடந்த ஜனவரியில் மட்டும் ரூ. 7,548 கோடி பங்கு சார்ந்த Mutual fund திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் ரூ. 4,432 கோடியாகும்.

அதேபோல, மிட் கேப் பண்டு சார்ந்த முதலீடுகளும் இந்த முறை அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த ஜனவரியில் மட்டும் ரூ. 1,798 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மிட் கேப் பண்டுகளின் விலையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மிட் கேப் பண்டுகள் துறையின் மதிப்பீடுகள் எளிதில் கவரும் விதமாக இருப்பதால், முதலீடுகள் அதிகரித்துள்ளது,.

கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ. 1,191 கோடி டெப்ட் பண்டில் இருந்து வெளியேறியுள்ளது. லிக்யூடு பண்டு சிக்கலாகி இருக்கும், வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிலையினால், அதிக பணயிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாக முதலீட்டாளர்கள் கருதினர். இதன் காரணமாக அதிக முதலீடுகள் இந்த டெப்ட் பண்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. லிக்யூடு பண்டில் இருந்து கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ. 71,158 வெளியேறிய நிலையில், ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 59,682 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் மொத்தமாக கணக்கிடுகையில், கடந்த டிசம்பர் மாதம் ரூ. 26.54 லட்சம் கோடியாக இருந்த Mutual Fund நிர்வகிக்கும் நிறுவனங்களின் சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரூ. 27.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!