வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் : கடன் மதிப்பீட்டு சிக்கல் – மீட்பு திட்டம் பற்றி ஆலோசனை

19 March 2020, 6:47 pm
NBFC-UPDATENEWS360
Quick Share

இந்திய வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் சென்ற நிதியாண்டின் காலத்தில், தங்கம் மீதான கடன் வழங்குகின்ற நிறுவனங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகவும் அதிகமான அளவுகளில், விரிவாக்கம் செய்து இருக்கின்றது. மேலும், இந்த சூழ் நிலையில், தங்க நகை சார்ந்த கடன் சந்தையின் வளர்ச்சி விகிதமானது, 13.4 சதவிகிதமாக, இருக்கின்றது.

மேலும், தங்க நகைக் கடன் பிரிவுகளில் ‘ஆன்லைன்’ மற்றும் ‘டிஜிட்டல்’ வசதிகளின் காரணமாக, தற்போது வாடிக்கையாளர்கள் அனைவரின் வீடு தேடி வந்து, கடன் வழங்குகின்ற வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றின் தங்க நகைக் கடன் வழங்குகின்ற சந்தையில், 35 % சதவிகிதமாக, பங்களிப்பை செய்து கொண்டிருக்கின்றது.

தங்கக் கடன் நிறுவனங்கள், பிற நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், நிதிச் சேவைகள் வழங்குகின்ற நிறுவனங்களுக்கும் பலத்த போட்டிகளை ஏற்படுத்தி இருகின்றது. தங்க நகைக் கடன்கள் வழங்குகின்ற பெரும் நிதி நிறுவனங்கள், அடுத்து நுண் கடன்கள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் போன்ற பிரிவுகளிலும் கால்பதித்து வருகின்றது. இதற்க்கு முன்பாக, வாடிக்கையாளர்களின் அவசர தேவைகளுக்கும், வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவதற்கும் கூட, தங்கத்தை அடமானம் வைப்பதன் மூலமாக, பணம் கடனாக பெற்றாக வேண்டிய சூழல் தற்போது இருக்கின்றது.

.அண்மை கால தங்கத்தின் விலையானது மிகவும் அதிகமான அளவுகளில் அதிகரித்து வருகின்ற நிலையில், மிகவும் கவனமாக, தங்க நகைக் கடன் வழங்க வேண்டி இருக்கின்றது என்றும், தங்கத்தின் விலையானது ஓரளவிற்கு, நிலை பெறுகின்ற வரையிலும், தங்க நகைக்கான கடன்கள் வழங்கப்படுவதில் இந்த நிதி மதிப்பீடு சார்ந்த சிக்கல் என்பது இருந்திடும் என்றும், தங்க நகை சார்ந்த கடன் வழங்குகின்ற நிறுவனங்கள்
சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது