கையில் மடக்கி வைக்கும் சாம்சங் செல்போன்.! காதலர் தினத்தில் விற்பனைக்கு..!!

12 February 2020, 10:41 am
Samsung Galaxy - updatenews360
Quick Share

உலகம் ரொம்ப வேகமாகவே வளர்ந்துட்டு வருதுனு தொழில்நுட்பத்தை வைத்து சுலபமாக சொல்லிவிடலாம்.

விஞ்ஞான வளர்ச்சியை மேற்கொண்டு செல்லும் இந்த உலகம் அசுர வளர்ச்சியை பெற்று வருகிறது. அந்த வகையில் வந்துள்ள புதிய வகையான செல்போன் தான் மடித்து வைக்ககூடிய செல்போன்.

இந்த மடித்து வைக்கத்தக்க புதிய வகையான மாடலில் 5 ஜி செல்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மாடல் கைக்குட்டையை போல வைத்துக்கொள்ள ஏதுவாக உள்ளது. flip flop வசதி கொண்ட இது மடக்ககூடிய வகையில் அமைந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z philip என்றழைக்கப்படும் இந்த கையடக்கமான செல்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. மெல்லிய கண்ணாடித்திரை போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இந்த செல்போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மடக்க கூடிய வகையில் அமைந்துள்ளதால் திரைப்படங்கள் பார்ப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற அப்பிளிகேஷன்களை தொடுதிரையின் மூலம் hold செய்து அழிக்க கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காதலர் தினம் ஸ்பெஷலாக இந்த செல்போன் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த மாடல் செல்போனின் விலை 1380 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்திய விலையின் மதிப்பாக 96 ஆயிரத்து 149 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது குறிப்பிடதக்கது.