நெடுஞ்சாலை மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளில் உலகளாவிய முதலீடு..! நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி அழைப்பு..!

13 August 2020, 11:01 am
nitin_gadkari_updatenews360
Quick Share

இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளில் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்ததாக எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு எடுத்துள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்த அமைச்சர், 2030’க்குள் ஜீரோ சாலை விபத்துக்களை அடைவதே நோக்கம் என்றும் கூறினார்.

சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் எம்.எஸ்.எம்.இ. துறைகளின் அமைச்சர் நிதின் கட்கரி, ஆட்டோமொபைல் மற்றும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் இரண்டு வளர்ச்சி இயந்திரங்கள் என்று கூறியதாக எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோ-ஆஸ்திரேலிய சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் மகளிர் கண்டுபிடிப்பாளர் வர்த்தக முதலீடு மற்றும் சாலை உள்கட்டமைப்பு மற்றும் எம்.எஸ்.எம்.இ.’களில் ஒத்துழைப்பு குறித்து உரையாற்றிய அமைச்சர், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே சாலை பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து வருகின்றன எனத் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பு சாலைகளுக்கு சிறந்த வடிவமைப்புகளையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

இந்திய சாலை பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், 21,000 கி.மீ சாலைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000 கி.மீ சாலை தொழில்நுட்ப மேம்பாட்டின் கீழ் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிறந்த சாலை பொறியியல் மற்றும் அதிகரித்த பொது விழிப்புணர்வு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றார்.

“இந்த மேம்படுத்தல் திட்டங்கள் சாலை விபத்துக்களில் 50 சதவிகிதம் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2030’க்குள் பூஜ்ஜிய சாலை விபத்துக்களை அடைவதே எங்கள் நோக்கம் என்று கட்கரி தெரிவித்தார்.” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்களைக் குறைக்க தனது அமைச்சகம் நிறைய முயற்சிகளை எடுத்துள்ளதாக கட்கரி தெரிவித்தார். இந்த பிரச்சாரத்திற்காக உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி தலா ரூ 7,000 கோடி வழங்க உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம், அவசரகால சேவைகளை மேம்படுத்துதல், மருத்துவ காப்பீட்டிற்கு அழுத்தம் கொடுப்பது, அதிகமான மருத்துவமனைகளை இதில் இணைத்தல் போன்றவற்றால் நாடு தனது சாலை பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு நெருக்கமாக உள்ளது என்றார்.

இந்தியாவில் போக்குவரத்துத் துறையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய விரிவான சட்டமான 2019 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்தை அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கிராமம், விவசாய மற்றும் பழங்குடியினர் துறைகளில் அரசு கவனம் செலுத்துகிறது என்று கட்கரி தெரிவித்தார். மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) துறைதான் வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை முன்னோக்கி செலுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பங்கு பொருளாதாரங்களில் பெரும் வாய்ப்புகள் இருப்பதால், உள்கட்டமைப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகளில் முதலீடு செய்ய அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Views: - 12

0

0