ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வருவாய் இழப்பு.!!

1 July 2020, 11:10 am
ONGC -Updatenews360
Quick Share

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு கடந்த நிதியாண்டின் கடை காலாண்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நிதியாணடின் ஜனவரி மார்ச் காலாண்டில் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு ரூ.3.098 கோடி இழப்பு ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில ரூ.4,240 கோடி லாபம் ஈட்டினாலும், கடைசி காலாண்டின் வருவாய் ரூ.21,456 கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின இதே காலாண்டில் ரூ.26,759 கோடியாக இருந்தது.

கடந்த நிதியாண்டின் போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13,445 கோடியாக சரிந்தது. ஜனவரி மார்ச் காலாண்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்நததால் 5.82 மில்லயன் டன்னாக இருந்தது. முந்தை காலாண்டில் 5.9 டன்னாக இருந்தது.

இதே போல இயற்கை எரிவாயு உற்பத்தி ஜனவரி – மார்ச் காலாண்டில் 6.04 பில்லியன் க்யூபிக் மீட்டர்களாக இருந்தது. முந்தைய நிதியாண்டின இதே காலக்கட்டத்தில் 6.56 பில்லியன் க்யூபிக் மீட்டர்களாக இருந்தது என அறிக்கையில் தெரிவித்துள்ளது.