அதானி குழுமத்துடன் கைகோர்க்கும் Flipkart : சென்னையில் 3வது டேட்டா சென்டரை நிறுவவும் திட்டம்..!!!

12 April 2021, 1:30 pm
flipkart - adani - updatenews360
Quick Share

சென்னை : ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் – அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்று ஃப்ளிப்கார்ட். இந்த நிறுவனத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு துறைகளில் கால்பதித்து வரும் அதானி குழுமத்துடன் கைகோர்த்து செயல்பட ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நிறுவனமும் மேற்கொண்டுள்ளன.

அதாவது, உள்நாட்டில் தங்களின் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேலும் மேம்படுத்தவும் ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து செயல்படுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

மேலும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது டேட்டா சென்டரை சென்னையில் உள்ள அதானி கோனர்ஸ் நிறுவனத்தில் நிறுவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 பேருக்கு நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

Views: - 890

0

0