நேபாளத்திற்கு NO Objection! இறக்குமதிக்கு தயாராகும் பாமாயில்..!!

13 February 2020, 10:35 am
Palm Oil - updatenews360
Quick Share

பாமாயில் இறக்குமதிக்கான தடையை நேபாளத்திற்கு மட்டும் மத்திய அரசு விரைவில் விலக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தின் போது இந்தியாவுக்கு எதிராக மலேசியா கருத்து தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்நாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்திருந்தது. தற்போது எதற்கு கருத்து தெரிவித்தோம் என மலேசியா தவித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்ததால் நேபாளம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இறக்குமதி தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் நேபாளம் தொடர் கோரிக்கையாக வைத்து வந்தது.

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய நேபாளத்திற்கு மட்டும் தடையை விலக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.