மகாராஷ்டிரா எம்எல்ஏ வீடு மற்றும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு..! பிஎம்சி வங்கி ஊழல் வழக்கில் இருவர் கைது..!
24 January 2021, 2:41 pmபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.
வங்கி நிதிகளை சட்டவியரோதமாக திசை திருப்பிய விவகாரத்தில், பகுஜன் விகாஸ் அகாதி கட்சியின் எம்எல்ஏவான ஹிரேந்திர தாக்கூர் மற்றும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நம்பப்படும் விவா குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த எம்எல்ஏ ஹிதேந்திர குமார் தலைவராக உள்ள பகுஜன் விகாஸ் அகாதி கட்சி மகாராஷ்டிராவில் ஆளும் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வசாய்-விராரை தளமாகக் கொண்ட விவா குழுமத்தின் இயக்குனர் மதன் கோபால் சதுர்வேதி மற்றும் எம்.டி. மெஹுல் தாகூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக விவா குழுமத்தைச் சேர்ந்த ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை தேடல்களை நடத்தியது. தேடலின் போது ரூ 73 லட்சம் ரொக்கம் மற்றும் டிஜிட்டல் மற்றும் ஆவண சான்றுகள் மீட்கப்பட்டன.
விவா குழுமத்துடன் இணக்கமாக பி.எம்.சி-ஊழல் குற்றம் சாட்டப்பட்ட வாத்வான் சகோதர்களுக்குச் சொந்தமான, வீட்டு மேம்பாட்டு உள்கட்டமைப்பு லிமிடெட் (எச்.டி.ஐ.எல்) நிறுவனத்திலிருந்து, ரூ 160 கோடிக்கு விவா குழுமத்தைச் சேர்ந்த பல நிறுவனங்களுக்கு கமிஷன் என்ற போரவையில் அனுப்பப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பி.எம்.சி வங்கி மோசடி வழக்கில் எச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்கு எதிரான பண மோசடி வழக்கில், அதன் புரமோட்டர்கள் ராகேஷ் குமார் வாத்வான், சாரங் வாத்வான், முன்னாள் தலைவர் வரியம் சிங் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கிடையே மேக் ஸ்டார் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு யெஸ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட ரூ 200 கோடி விவகாரத்திலும், வாத்வான் சகோதரர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
0
0