பஞ்சாப் வங்கியின் நிகர லாபம்!!

23 August 2020, 5:47 pm
PNB- Updatenews360
Quick Share

பொதுத்துறையை சேர்ந்த இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் ஜுன் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.24,292.80 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.15,161.74 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.308 கோடியாக உள்ளது. இந்த லாபத்தை கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் ரூ.1,018.63 கோடியாக இருந்தது.

ஜுன் மாத நிலவரப்படி வங்கி வழங்கிய கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 16.49 சதவீதத்தில் இருந்து 14.11 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம 7.17 சதவீதத்தில் இருந்து 5.39 சதவீதமாக சரிந்துள்ளது என பிஎன்பி வங்கி பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளது.

Views: - 48

0

0