பங்கு சந்தை வர்த்தக நேரக்கட்டுப்பாடு..! காலவரையின்றி நீட்டித்து ஆர்பிஐ உத்தரவு..!

30 April 2020, 5:35 pm
RBI_UpdateNews360
Quick Share

பங்கு சந்தை வர்த்தகம் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என்றும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நேரக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்னதாக ஏப்ரல் 16 அன்று ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 30 வரை திருத்தப்பட்ட பங்கு சந்தை வர்த்தக நேரம் அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேர கட்டுப்பாடு இன்றுடன் முடிவடைவதால், நேரக் கட்டுப்பாட்டை மாரு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கும மற்றும் சந்தை பங்கேற்பாளர்கள் வளங்களை மேம்படுத்துவதற்கும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போதுமான காசோலைகள் மற்றும் மேற்பார்வைக் கட்டுப்பாடுகளைப் பராமரிப்பதை உறுதி செய்வதற்காக சந்தை நேரங்கள் திருத்தப்பட்டன என்று ஆர்பிஐ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.