எஸ்பிஐ வங்கியை ஏமாற்றி முறைகேடாக கடன் பெற்ற நிறுவனம்..! சிபிஐ பதிவு செய்து விசாரணை..!

23 August 2020, 1:28 pm
SBI_Updatenews360
Quick Share

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (எஸ்பிஐ) ரூ 938 கோடி கடன் மோசடி செய்ததாக மத்திய பிரதேசத்தின் மொரேனாவை தளமாகக் கொண்ட கே.எஸ் ஆயில்ஸ் லிமிடெட் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ரமேஷ் சந்திர கார்க் உள்ளிட்ட அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மொரேனாவில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை மற்றும் பதிவு செய்யப்பட்ட அலுவலகம், கார்க் மற்றும் மற்றொரு இயக்குனர் சௌரப் கார்க் இல்லம் மற்றும் புதுடெல்லியின் பரகாம்பா சாலையில் உள்ள அதன் அலுவலகம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ’யால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.

நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் தேவேஷ் அகர்வால் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் அவரது வளாகத்தில் எந்த தேடலும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

“தடயவியல் தணிக்கையின் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கும் போது, நிறுவனத்தின் நிதி போலியாக உயர்த்தி காட்டப்பட்டதாகக் எஸ்பிஐ கூறியது. மேலும் மோசடி திசைதிருப்பல் மூலம் கடன் தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது” என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே.கௌர் கூறினார்.

Views: - 45

0

0