சைரஸ் மிஸ்திரியின் நியமனம் சட்டவிரோதம்..! டாடா குழும சேர்மன் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

26 March 2021, 1:13 pm
Tata_Chairman_Post_UpdateNews360
Quick Share

சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவராக திரும்ப அமர்த்தும், 2019 டிசம்பர் 18 ஆம் தேதி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

ஏறக்குறைய 5 வருட கால வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டாடா குழுமத்திற்கும் மிஸ்திரிகளுக்கும் இடையிலான பெருநிறுவனப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச், எஸ்.பி. குழு மற்றும் சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் அளித்த மேல்முறையீடுகளையும் தள்ளுபடி செய்தது.

அக்டோபர் 2016’இல் சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு கடுமையான சட்டப் போர் வெடித்தது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்.சி.எல்.டி) டாடா நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்தாலும், ​​மிஸ்திரி அகற்றப்படுவது சட்டவிரோதமானது என்று என்.சி.எல்.ஏ.டி கூறியது. 

என்.சி.எல்.ஏ.டி தனது 2019 உத்தரவில் மிஸ்திரியை டாடா குழுமத்தின் தலைவராக மீண்டும் நியமித்தது. மேலும் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான உப்பு-மென்பொருள் கூட்டு நிறுவனங்களின் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டது.

டாடா நிறுவனம் பின்னர் என்.சி.எல்.ஏ.டி தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது. டாடா சன்ஸில் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ், டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா தலைமையிலானது. அதே நேரத்தில் மிஸ்திரி குடும்பம் நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறது.

நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் கடந்த ஆண்டு டிசம்பர் 17’ஆம் தேதி இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய உச்சமீன்திமன்றம், டாடா குழுமத்தில் சைரஸ் மிஸ்திரியின் நியமனம் செல்லாது என்று அறிவித்து, அவரை பதவியில் அமர்த்துவது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளது. மேலும் சந்திரசேகரனின் நியமனம் தான் செல்லும் எனக் கூறி டாடா குழுமத்திற்கு நிம்மதியளிக்கும் வகையில் தீர்ப்பளித்துள்ளது.

Views: - 0

0

0