மணிக்கு 400 மில்லியன் டாலர் இழப்பு..! உலக வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூயஸ் கால்வாய் முடக்கம்..!

27 March 2021, 1:53 pm
Suez_Canal_Ship_EverGiven_UpdateNews360
Quick Share

உலகின் மிக முக்கியமான வர்த்தக பாதைகளில் ஒன்றான சூயஸ் கால்வாயை முடக்கிய பெரிய சரக்குக் கப்பலால், பொருட்கள் தாமதமாவதால் உலக வர்த்தகத்தில் ஒரு மணி நேரத்திற்கு 400 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட லாயிட்ஸ் லிஸ்ட் எனும் சரக்கு போக்குவரத்து ஜர்னல் மதிப்பிடப்பட்டுள்ளது.

எவர் கிவன் என்று அழைக்கப்படும் இந்த கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் எகிப்து வழியாக செல்லும் சூயஸ் கால்வாயில் இரண்டு புறத்திலும் கரையை மோதிக்கொண்டு நிற்கிறது. இந்த கால்வாய் ஐரோப்பாவை ஆசியாவோடு இணைக்கும் ஒரு முக்கிய கப்பல் பாதையை வழங்குகிறது.

லண்டனை தளமாகக் கொண்ட கப்பல்-செய்தி இதழான லாயிட்ஸ் லிஸ்ட், ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாயின் வழியாகச் செல்லும் சரக்குப் பொருட்களின் மதிப்பு சராசரியாக 9.7 பில்லியன் டாலராக மதிப்பிட்டுள்ளது. 

ஒவ்வொரு நாளும் சூயஸ் கால்வாயின் வழியாக செல்லும் கப்பல்களின் சராசரி எண்ணிக்கை 93 ஆகும். அதாவது இதுவரை 300 கப்பல்கள் ஏற்கனவே அங்கு முடங்கியுள்ளன. எவர் கிவன் இன்னும் கப்பல் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில், கப்பலை வெளியேற்ற பல வாரங்கள் ஆகக்கூடும் எனக் கூறப்படுகிறது. எனினும் கப்பலின் உரிமையாளரான ஜப்பானிய நிறுவனமான ஷோய் கிசென், வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்த கப்பலை விடுவிப்பதாக நம்புவதாக தெரிவித்துள்ளது.

சூயஸ் கால்வாயின் இந்த முடக்கத்தால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய விநியோகச் சங்கிலி மிகப்பெரிய பாதிப்பை எதிகொள்ள ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே சில கப்பல்கள் வழியை மாற்றி, ஆப்பிரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றி நீண்ட, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளவும் தயாராகியுள்ளன.

Views: - 0

0

0