இந்தியாவில் தொழில் துவங்க ஏற்ற மாநிலம் : மத்திய அரசு பட்டியல்

19 March 2020, 4:44 pm
INDIA-UPDATENEWS360
Quick Share

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், எளிதாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களை தர வரிசைப்படுத்தி வெளியிடுகின்றது.

மேலும், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் எளிதாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அடுத்த பட்டியலானது, மார்ச் மாதத்திற்குள் வெளியிடப்பட இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் செய்தியில், தெரிவித்து இருக்கின்றார்கள்.

உலக அளவிலான தொழில் முதலீட்டாளர்களை இந்திய மாநிலங்களில் தொழில் துவங்குவதற்காக, ஈர்க்கின்ற வகையில், இந்திய மாநிலங்களில் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்காகவும், இந்திய மாநிலங்களுக்கு இடையில், தொழில் ரீதியிலான போட்டிகளை துாண்டுகின்ற வகையிலும், தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலானது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்படுகின்றது.

இந்திய தொழில் நிறுவனங்களின் கட்டுமான அனுமதி, தொழிலாளர் விதிமுறைகள், சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்துவது, ஒற்றை சாளர முறையிலான அனுமதி, பல் வேறு விஷயங்களை அடிப்படையாக வைத்து, தொழில் நிறுவனங்களுக்கு தொழில் புரிவதற்கு ஏற்ற சூழலின் அடிப்படையில், இந்திய மாநிலங்களின் பட்டியல் , மத்திய அரசாங்க ஆய்வுகளின் மூலமாக தயாரிக்கப்படுகின்றது.