வாழ்வாதாரம் திரும்ப கிடச்சுடுச்சு : செங்கல் உற்பத்தி தொடக்கம்.!!

22 May 2020, 4:22 pm
Theni Bricks - Updatenews360
Quick Share

தேனி : தமிழக அரசு செங்கல் உற்பத்திக்கு விலக்கு அளித்திருப்பதால் மீண்டும் செங்கல் உற்பத்தி தொடங்கியதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் ,ஊரக பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் செங்கலுக்கு வெளி மாவட்டங்களில் நல்ல வரவேற்பு உண்டு. காரணம், இப்பகுதியில் அதிகமான நீர் நிலைக் கண்மாய்கள் உள்ளதாலும், செம்மண் அதிகம் இருப்பதாலும்,களிமண் மற்றும் செம்மண் இரண்டு வகை மண்ணால் கலவை செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதால் இப்பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல் உறுதியுடனும், நல்ல தரத்துடனும் இருப்பதாலும் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை கட்டுமானப் பணிகளுக்கு கட்டிடப் பொறியாளர்கள் பரிந்துரை செய்வார்கள்.

இதனால், இப்பணிக்காகஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் தேவைப்படுவதால் வெளியூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் செங்கல் காளவாசலிலேயே தங்கியிருந்து செங்கல் தயாரிக்கும் பணி செய்து வந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வந்த கொரொனா வைரஸ்த் தொற்று காரணமாக தமிழக அரசு144, தடை உத்தரவு பிறப்பித்திருந்ததால் செங்கல் உற்பத்திப் பணிகள் அடியோடு முடங்கின.

இதனால் தொழிலாளர்கள் வருவாய் ஈட்டுவதற்கு வழியின்றி பெரும் பாதிப்புக்கு ஆளாகினர், அன்றாடம் உணவுப் பிரச்சினையைக் கூட சமாளிக்க முடியாமல் வெளியூரிலிருந்து இங்கு பணிபுரிந்து வந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இந்நிலையில், தமிழக அரசு தடை உத்திரவு காலத்தில் ஒரு சில அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளித்திருப்பதால் மீண்டும் செங்கல் உற்பத்திப் பணி தொடங்கியதால் 50- நாட்களுக்கும் மேலாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செங்கல் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் செங்கல் உற்பத்தித் தொழில் தொடங்கியிருப்பதால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்பணியில் ஈடுபட்டு மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகின்றனர்.