டிஎன்பிஎல் நிறுவனத்தின் வருவாய் சரிவு.!!
19 August 2020, 9:48 amதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனம் முதல் காலாண்டில் பெற்றுள்ள வருவாய் சரிவடைந்துள்ளது.
செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்கள் தயாரிக்கும் நிறுவனமான டிஎன்பிஎல் நிறுவனம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.501.29 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
அதாவது, நடப்பு நிதியாண்டான 2020-21ஆம் நிதியாண்டின் ஜுன் 30ஈம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறகூனம் ரூ.501.29 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடும் போது ரூ.960.63 கோடி என்பதால் கணிசமாக சரிவடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்திற்கு ரூ.30.72 கோடி வரிக்கு முந்தைய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வரிக்கு பிந்தைய இழப்பு ரூ.20.01 கோடியாக இருந்தது. கொரோனா பொதுமுடக்கத்தால் விற்பனை மதிப்பு 48 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக டிஎன்பிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.