பொருளாதார மந்தநிலை போயே போச்சு..! இருசக்கர வாகன ஏற்றுமதியில் நீடித்த வளர்ச்சியைக் காணும் இந்திய தொழில்துறை..?

25 November 2020, 11:07 am
indias_two_wheeler_exports_updatenews360
Quick Share

கொரோனா மற்றும் கச்சா எண்ணெய் விலைகளால் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளதால், இந்த ஆண்டின் முதல் பாதியில் தற்காலிக இடையூறுகளைக் கண்ட இந்தியாவின் இரு சக்கர ஏற்றுமதி, அடுத்த நிதியாண்டின் இரண்டாம் பாதிவரை தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணும் என்று மதிப்பீட்டு நிறுவனமான இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி (இந்த்-ரா) அமைப்பு தெரிவித்துள்ளது.

முதன்மையாக ஏற்றுமதி நாடுகளில் நிலவும் குறைந்த பயன்பாடு, வணிக தேவை, கச்சா விலையில் ஸ்திரத்தன்மை, பொது உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் பொது போக்குவரத்துக்கு வெறுப்பு ஆகியவற்றால் நிதியாண்டு 2021 மற்றும் 2022’இன் மீதமுள்ள பகுதியில் வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா இரு சக்கர வாகனங்களை முக்கியமாக ஆப்பிரிக்க, ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முறையே 37.5 சதவீதம், 22.9 சதவீதம் மற்றும் 21.4 சதவீதம் எனும் அளவில் 2021 நிதியாண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி செய்துள்ளது.

“இதில், நைஜீரியா, கொலம்பியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே மொத்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை கொண்டுள்ளன” என்று மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (ஓஇஎம்) தங்களது வலுவான சந்தை நிலை மற்றும் வலுவான விநியோக நெட்வொர்க்கின் மூலம் தங்கள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

இந்த ஏற்றுமதியில் இந்திய இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களான பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் ஆகியவை தங்கள் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட வணிக மாதிரியின் காரணமாக அதிக பயனடைகின்றன. இந்த நிறுவனங்கள் ஏற்றுமதியில் முறையே கிட்டத்தட்ட 49 சதவீதம் மற்றும் 26 சதவீதம் பங்குகளைக் கொண்டுள்ளன.

இருப்பினும், உலகளவில் வலுவான சந்தைப் பங்கைக் கொண்ட ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து இருந்து, இந்திய வாகன உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன. 

இருசக்கர வாகனம் ஏற்றுமதி நம்பிக்கை அளித்தாலும் உள்நாட்டு தொழில்துறை வீழ்ச்சி 18-21 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்த்-ரா தெரிவித்துள்ளது.

“இரு சக்கர வாகன ஏற்றுமதிகள் இந்திய நிறுவனங்களின் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் 16-18 சதவிகிதம் மட்டுமே இருப்பதால், அதே காலகட்டத்தில் உள்நாட்டு இழப்புகளை ஈடுசெய்ய இது போதுமானதாக இருக்காது” என்று அது மேலும் கூறியுள்ளது.

நிதியாண்டு 2022’இல் இளைஞர்கள் மூலம் இருசக்கர வாகன ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் பலவீனமடைதல் ஆகியவற்றின் காரணமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் தொழில்துறை தற்காலிக சிக்கல்களை எதிர்கொண்டது. இது இந்தியாவிற்கான முக்கிய ஏற்றுமதி இடங்களின் பொருளாதாரங்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

“இது நாடு தழுவிய ஊரடங்கு, விநியோகச் சங்கிலி மற்றும் தளவாட சீர்குலைவுகள் ஆகியவற்றுடன் ஏற்றுமதி விற்பனையை கணிசமாக பாதித்தது” என்று இந்த்-ரா கூறியுள்ளது.

Views: - 0

0

0