யூனியன் வங்கியின் லாபம் அறிவிப்பு!!

22 August 2020, 6:12 pm
Union Bank - Updatenews360
Quick Share

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.340.35 கோடி என தெரிவித்துள்ளது.

ஏப்ரல் ஜுன் மாத காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.20,487.01 கோடியாக இருந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் வங்கியின் வருவாய் ரூ.10,053.68 கோடியாக இருந்தது. கநடப்பி நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.340.95 கோடியாகும்.

கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் வங்கியின் நிகர லாபம் ரூ.230.12 கோடியாக இருந்தது. முதல் காலாண்டு இறுதியில் வங்கியின் வாராக் கடன் விகிதம் 14.95 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு வாராக்கடன் விகிதம் ரூ.230.12 கோடியாக இருந்தது.

யூனியன் வங்கியுடன் ஆந்திர வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி இணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த நிதியாண்டுக்கு தெரிவித்த தொகை இணைப்பு நடவடிக்கைக்கு முன்பு யூனியன் வங்கி செயல்பாட்டை சேர்ந்தது என யூனியன் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 31

0

0