இனி பட்ஜெட்டை நாமும் தெரிந்து கொள்ளலாம்..! தனி மொபைல் செயலியை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்..!

23 January 2021, 8:34 pm
Union_Budget_Mobile_App_UpdateNews360
Quick Share

பட்ஜெட் தயாரிக்கும் பணியின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் வகையில், வழக்கமான அல்வா விழா புதுடெல்லியில் பெயரளவில் இன்று நடைபெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் அல்வா கிண்டப்படுவது வழக்கமாக நடக்கும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா காரணமாக ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்பிரதாயமாக இன்று நடந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எந்தவித இடையூறும் இல்லாமல் நேரடியாக தெரிந்து கொள்ள இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக முதல்முறையாக, யூனியன் பட்ஜெட் 2021-22 பிப்ரவரி 1’ஆம் தேதி முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில் எம்பிகளுக்கு வழங்கப்படுவதால், மக்களும் நேரடியாக தெரிந்து கொள்ள இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மொபைல் பட்ஜெட் செயலி, 14 யூனியன் பட்ஜெட் ஆவணங்களை முழுமையாக அணுக உதவுகிறது. இதில் ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானியங்களுக்கான தேவை, நிதி மசோதா போன்றவை உள்ளன.

பிப்ரவரி 1’ஆம் தேதி பட்ஜெட் உரை நிதியமைச்சரால் முழுமையாக வாசிக்கப்பட்டதும், மொபைல் செயலியில் பட்ஜெட் ஆவணங்கள் உடனடியாக பதிவேற்றப்படும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும். மேலும் இந்த செயலியை யூனியன் பட்ஜெட் வலைதளமான www.indiabudget.gov.in’லிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

Views: - 0

0

0