சரிவை சந்தித்த Whirlpool நிறுவனம்.!!

7 August 2020, 6:43 pm
Whirlpool - Updatenews360
Quick Share

Whirlpool நிறுவனம் முதல் காலாண்டில் 91.82 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜுன் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த வருவாய் ரூ.1,041.24 கோடியை ஈட்டியுள்ளது. இந்த வருவாயை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 47.98 சதவீதம் குறைவாகும்.

விற்பனை வருவாயில் ஏற்பட்ட சரிவால் நிறுவனத்தில் நிகர லாபம் ரூ.192.67 கோடியில் இருந்து 91.82 சதவீதம் சரிவடைந்து ரூ.15.75 கோடியானது என Whirlpool நிறுவனம் பங்குச்சந்தையிடம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் Whirlpool நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.2,001.63 கோடி என்பது குறிப்பிடதக்கது. மும்பை பங்குச்சந்தையில் Whirlpool நிறுவனத்தின் பங்கு 1.24 சதவீதம் உயர்ந்து ரூ.2,115ஆக காணப்பட்டது.