முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடலநலைக்குறைவு… மருத்துவர்கள் பரிந்துரை : அவசர அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 1:41 pm
CM - Updatenews360
Quick Share

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு அவர் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் முதல்வர் இருந்த திருப்பத்தூர், வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும், இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி உள்ளதால் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Views: - 419

0

0