நான் சொல்ற ஹோட்டல்ல தான் ரூம் போடணும்…அடம் பிடிக்கும் ஸ்டார் நடிகை..!

Author: Selvan
8 February 2025, 9:02 pm

படப்பிடிப்பில் ஆட்டம் போடும் ஸ்டார் நடிகை

அண்டை மாநிலத்தில் இருந்து வந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.ஆரம்பத்தில் பம்மிய அந்த நடிகை ஸ்டார் நடிகை ஆன பின்பு பல கண்டிசன்களை போட்டு வருகிறார்.

இதையும் படியுங்க: என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!

ஆரம்ப கால கட்டத்தில் எந்த ஒரு கிசு கிசுப்பிலும் சிக்காத ஸ்டார் நடிகை வாரிசு நடிகருடன் நெருங்கி பழகி காதலில் விழுந்தார்.விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அந்த வாரிசு நடிகர் ஸ்டார் நடிகைக்கு டாடா காட்டினார்.

அதன் பிறகு ஸ்டார் நடிகை வாரிசு நடிகரை பழி வாங்கும் நோக்கில்,திருமணம் ஆன நடிகரை தனது காதல் வலையில் வீழ்த்தினார்.அதன் பிறகு அந்த நடிகரின் மனைவி ஸ்டார் நடிகையை வெளுத்து வாங்கியதால் அந்த காதலும் புஷ்வாணம் ஆனது.

அதன்பிறகு முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்தி தன்னுடைய கரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.திடீரென இயக்குனர் ஒருவரை கல்யாணம் செய்து ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.தற்போது பல படங்களில் லீட் ரோலில் நடித்து வரும் ஸ்டார் நடிகை ஷூட்டிங் ஸ்பாட்டில் பல கண்டிசன்களை போட்டு வருகிறார்,தான் சொல்ற ஹோட்டலில் தான் ரூம் போட்டு தர வேண்டும்,அங்கே என்னை தவிர வேற யாரும் இருக்க கூடாது என கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.படகுக்குழுவும் ஸ்டார் நடிகையின் கோரிக்கை வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!