1000 கோடி வசூல்! வாய்ப்பில்லை ராஜா?கூலி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?
Author: Prasad19 August 2025, 1:11 pm
400 கோடிகளுக்கும் மேல் கலெக்சன்!
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் காம்போவில் உருவான “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் வெளிவந்து 5 நாட்கள் முடிவடைந்துள்ளது. இத்திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று தனது எக்ஸ் தளத்தில் உலகளவில் இத்திரைப்படம் ரூ.404 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

1000 கோடி வசூல்?
“கூலி” திரைப்படம் வெளியானதில் இருந்தே இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் அடிக்கும் என எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எப்போதும் ஒரு படம் வெளியாகி அதன் வார இறுதி நாட்கள் வரைதான் கூட்டம் அலைமோதும். அதன் பின் பெரும்பாலான மக்கள் அப்படத்திற்கு செல்லமாட்டார்கள். இது சமீப காலமாக நடக்கும் வழக்கம்தான். அந்த வகையில் இனி வரும் நாட்களில் “கூலி” திரைப்படத்தின் வசூல் குறையும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் அடிக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது.
