அய்யோ இவங்களா.. அதிரடியாக வரும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள்.. தரமான சம்பவம் இருக்கு போலயே..!

Author: Vignesh
23 October 2023, 1:03 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில், அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார்.

முன்னதாக, 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கிறார்கள். இதனால், இந்த வாரம் கண்டிப்பாக ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் என ரசிகர்கள் எண்ணிய நிலையில் கமல் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

KAMAL HASSAN

ஒரு வைல்ட் கார்டு என்டரி கிடையாதாம். மொத்தம் 5 புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் அனுப்பிவைக்க உள்ளதாக கமல் ஹாசன் கூறியுள்ளார். வருகிற ஞாயற்று கிழமை 29ஆம் தேதி இது நடக்கவிருக்கிறது என்றும் ப்ரோமோ வீடியோவில் கமல் தெரிவித்துள்ளார்.

அவர் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒரே கண்ணால என்ன ஓரங்கட்டுரா புகழ் கானா பாலா என்றும், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், ராஜா ராணிபிரபலம் அர்ச்சனா, பாரதிகண்ணம்மா நடிகர் அருண், ஸ்ரீதேவி விஜயகுமார் என 5 பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாக பரவி மக்களை அலெர்ட் மோடிலேயே வைத்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!