லியோ படத்தால் வெறிச்சோடிய கோவை தியேட்டர்- மாஸ் ஹீரோவின் மார்க்கெட்டை காலி செய்த லோகேஷ்..!

Author: Vignesh
23 October 2023, 12:39 pm
leo
Quick Share

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.

உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் அதிகபட்ச தொடக்க நாளில் வசூல் செய்த இந்தியத் திரைப்படம் இதுவாகும்.

LEO - Updatenews360

சுமார் 300 கோடி வசூலை 4 நாட்களில் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் சில திரையரங்குகளில் விடுமுறை நாளில் கூட வெறுச்சோடியுள்ளதாம் சில காட்சிகள். அதாவது கோவை பாபா திரையரங்கில் போதிய கூட்டமே இல்லாத காரணத்தால் லியோ காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

leo-updatenews360
Views: - 425

0

6