ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!

Author: Vignesh
29 April 2024, 10:54 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

Goat vijay

மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!

இதனிடையே, நடிகர் விஜய் தற்போது நடித்துவரும் கோட் படத்தின் முதல் பாடல் விசில் போடு என சில தினங்களுக்கு முன்பு வெளியானது. யுவன் இசையில் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. விஜய் ரசிகர்களே பாடலை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் முந்தைய பாடல்களை ஒப்பிட்டு விசில் போடு பாடலை நெட்டிசன் பலரும் ட்ரோல் செய்து வந்தனர்.

sreeleela

இந்நிலையில், கோட்படத்தில் குத்து பாடல் படமாக்க உள்ள நிலையில், அதில் ஆட்டம் போட தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், ஸ்ரீ லீலா தமிழ் சினிமாவில் அறிமுகமாக போகிறோம், அதுவும் குத்துப்பாட்டு மூலமாக வேண்டாம் என்றும் கதாநாயகியாகவே நடிக்க முடிவு செய்துள்ளதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

vijay-trisha 2

மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!

இந்நிலையில், பேச் ஓர்க்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகை திரிஷா தான் அந்த குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட உள்ளாராம். லியோ படத்தினை தொடர்ந்து விஜயுடன் குத்து பாட்டலுக்கு நடிகை திரிஷா ஆட்டம் போட உள்ள செய்தியை பிரபல பத்திரிகையாளர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார்கள்.

  • Ajith Vidamuyarchi Trailer Release Update விடாமுயற்சி ட்ரைலர் ரெடி : அப்போ ரிலீஸ் தேதி…இருங்க பாய்..நாளைக்கு ஒரு வெயிட்டான சம்பவம் இருக்கு..!