வாரணாசியில் MODI தோற்கடிக்கப்பட வேண்டும்.. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2024, 1:46 pm
Su
Quick Share

வாரணாசியில் MODI தோற்கடிக்கப்பட வேண்டும்.. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை!

பிரதமர் நரேந்திர மோடி, அவரது தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணாசிக்கு ஆன்மீக பயணமாக சென்றிருந்தார்.

வாரணாசி பயணத்தை முடித்த அவர், தனது எக்ஸ் தள பக்கத்தில், வாரணாசி வாக்காளர்கள் மோடியை தோற்கடித்தால், ஞானவாபி மசூதியினர், காசி விஸ்வநாதர் ஆலைய இடத்தை காலி செய்து, முஸ்லிம் தலைவர்கள் விருப்பப்படி தங்கள் மசூதியை வேறு இடத்தில் கட்டுவது எளிதாகிவிடும்.

மேலும் படிக்க: பாமக பிரமுகருக்கு கொலை மிரட்டல்.. MyV3 Ads நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மீது பரபரப்பு புகார்!

இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் படி வேறு இடத்தில் மசூதி கட்டலாம். மேலும், ராமர் கோவில் நில வழக்கில் நீதிமன்றத்தின் மூலம் மற்றொரு இடத்தில் மசூதி கட்ட முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது பாஜகவினரிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 307

0

0