இந்த மாதிரி FAMILY ENTERTAINMENT MOVIE காட்டுறவனுக்கு LIFE TIME SETTLEMENT டா : ட்ரெண்டாகும் #Viswasam!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 1:59 pm
Viswasam - Updatenews360
Quick Share

பொங்கல் பண்டிகை விடுமுறையை குறி வைத்து தல தளபதி படங்கள் வெளியானது. ஜனவரி 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதே நாள் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் வெளியானது.

8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதின. இரண்டு படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அஜித் விஜய் ரசிகர்கள் நாங்கள்தான் பொங்கல் வின்னர் என மார் தட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் துணிவு தான் அதிக வசூல் பெற்றதாக ஒரு தரப்பினரும், வாரிசு தான் அதிக வசூல் என மற்றொரு தரப்பினரும் மாறி மாறி சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் பற்றி துணிவு படக்குழு இன்னும் எந்த தகவலையும் வெளியிட வில்லை. ஆனால் இரண்டு படத்தையும் விநியோகித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், இரண்டு படங்களுமே நல்ல வசூல் என கூறியுள்ளது.

இந்த நிலையில், வாரிசு படம் குடும்ப படம் என்பதால் படத்திற்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர். இதை அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

விஸ்வாசம் படம் மெகா ஹிட் அடித்ததற்கு காரணம், வலுவான குடும்பக் கதை, கதாபாத்திரங்களும் கனக்கச்சிதமா பொருந்தின. படட்ததின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவரும் கண் கலங்கினர்.

இது குறித்த வீடியோ ஒன்றில், கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து தந்தை மடியில் சிறுமி தேம்பி தேம்பி அழுவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு, இந்த மாதிரி Family Entertainment Movie Kaatrunavuku Life Time Settlement da
என பதிவிட்டுள்ளனர்.

விஸ்வாசம் படத்துடன் ஒப்பிடுகையில் வாரிசு படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் குறைவு. அதுவும் அனைவரும் விஸ்வாசம் கொடுத்த வரவேற்பை வாரிசு படத்துக்கு கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு #Viswasam என்ற ஹேஷ்டெக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த பதிவுக்கு ரசிகர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 473

3

0