மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய சமந்தா… சர்ப்ரைஸ் பரிசை கொடுத்ததால் ரசிகர்கள் உற்சாகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 2:29 pm
Samantha - Updatenews360
Quick Share

எப்போதும் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து நேரத்தை செலவிடாமல், புகைப்படம்,விடியோ என குறியீடு மூலம் பதில் அளிப்பதை வழக்கமாக கடைப்பிடித்து வரும் நடிகை சமந்தா, தான் பலவீனமாக இருப்பதாக குறிப்பிட்ட பிரபல ஊடகத்துக்கு, வலிமையாக இருக்கும் தனது உடற்கட்டு புகைப்படத்தை பகிர்ந்து பதில் அளித்துள்ளார்.

மயோசிடைஸ் நோயால் அவதிப்பட்டு வந்த சமந்தா, தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல குணமாகி வருகிறார். இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா குறித்து வீண் வதந்திகள் கிளம்பி வந்தது.

அதையெல்லாம் நொறுக்கும் வகையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் சமந்தா பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் சாகுந்தலம் படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அவர், வாழ்கையில் தனக்கு ஏற்பட்ட போராட்டங்களை நினைத்து கண்ணீர் விட்டார். ஆனாலும், சினிமா மீது நான் கொண்ட காதல், சினிமா தனது மீது கொண்டுள்ள காதல் குறித்து உணர்ச்சிகரமாக பேசினார்.

தற்போது சமந்தாவின் சாகுலந்தலம் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அழகாக, வலிமையாக உள்ள அந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Views: - 556

8

2