ரஜினிக்கு பீடி பற்ற வைத்தது பிரச்சனையா? விமர்சனங்களுக்கு ஆமிர்கானின் பதிலடி…
Author: Prasad22 August 2025, 11:36 am
ரஜினிக்கு பீடி பற்ற வைத்த ஆமிர்கான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மிகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ஆமிர்கான், ரஜினிகாந்திற்கு பீடி பற்ற வைத்தது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பாலிவுட்டில் இவர் எவ்வளவு பெரிய நடிகர், இவர் பீடி பற்ற வைக்கலாமா? இவ்வளவு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்திலா நடிப்பது? என பல கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து பதில் அளித்துள்ளார் ஆமிர்கான்.
நான் அவரின் தீவிர ரசிகன்…
“கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு பீடி பற்ற வைப்பதுதான் எனது வேலை. அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமை” என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
