“இந்தியில் அசுரனாக மாறும் தனுஷ்.” விரைவில் அறிவிப்பு ..!

Author: Rajesh
28 January 2022, 12:39 pm

இந்தியில் ஆனந்த் எல். ராய். இயக்கத்தில் தனுஷ் நடித்த ராஞ்சனா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து 8 வருடத்திற்கு பின்னர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே திரைப்படத்தில் அக்ஷய் குமாரும் சாரா அலி கானும் உடன் தனுஷ் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷுடன் இணையவுள்ளார் ஆனந்த் எல். ராய்.
முதல் இரு படங்களை காதல் திரைப்படமாக எடுத்த ஆனந்த் எல். ராய் தற்போது, ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக எடுக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மேலும் ஒரு இந்தி திரைப்படத்தில் நடிக்க தனுசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது வாத்தி, மாறன், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!