நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ் வெளியிட்ட புகைப்படம்..! மகிழ்ச்சியில் ரஜினி குடும்பம்..!

Author: Rajesh
16 February 2022, 4:51 pm
Quick Share

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார். இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே, இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் அக்ஷய் குமாருடன் இருக்கும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 793

15

1