நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு இப்ப விஜய் தான் முக்கியமா? போவியா… காண்டான மன்சூர் அலிகான்..!
Author: Vignesh12 ஏப்ரல் 2023, 6:45 மணி
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வமுடித்து. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. ஆனால் ரசிகர்கள் தொல்லையால் அங்கிருந்து பேக்கப் செய்து ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
80ஸ்,90ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கி வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமின்றி ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தற்போது நடிகர் மன்சூர் அலிகான் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் நடிகர் மன்சூர் அலிகான் கமிட்டாகியுள்ளார்.
இதனிடையே, சரக்கு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதாவது நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, தம்பி விஜய்யின் ‘லியோ’ படத்தில் இன்னும் நான் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை என்றும், தன்னுடைய ‘சரக்கு’ படத்தில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன் எனவும், ‘லியோ’ படக்குழுவினர் காஷ்மீர் சென்று ஷூட்டிங்கை முடிந்து விட்டு வந்துள்ளதாகவும், அதன்பிறகு தான் தனக்கான பகுதிகள் படமாக்கப்படும் எனவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமான தேதிகளை கேட்டு வாங்கியுள்ளதாகவும், விஜய்யுடன் தான் 10 படங்களுக்கு மேல் நடித்துதள்ளதாகவும், தேவா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது என்றும், மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய்யின் வளர்ச்சி குறித்து செய்தியாளர் கேள்வி கேட்க, நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு போவியா..,இதான் முக்கியமா? என்று நெத்தியடி பதிலை நடிகர் மன்சூர் அலிகான் கொடுத்துள்ளார்.
14
2