மது அருந்துவதற்கு முன் இதை சாப்பிட்டால் சங்கு கன்ஃபார்ம்… மன்சூர் அலிகான் கொடுக்கும் ஃபிரீ அட்வைஸ்..!
Author: Vignesh5 செப்டம்பர் 2023, 2:30 மணி
தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.
இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்து வருகிறார்.
இவர் பிரபல youtube சேனல் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். அதில் வெண்டைக்காய் சாப்பிடுங்க.. ஆனால், மது அருந்திய நபர்கள் உடனே வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம். அதை போல் அகத்திக் கீரையும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. மது அருந்துவதற்கு முன்பு சரி சாப்பிட்ட பிறகும் சரி அகத்திக் கீரையை உண்ண வேண்டாம். மீறி சாப்பிட்டால் உடனே அவர்கள் உயிரிழந்து போவார்கள். வெண்டைக்காய் சாப்பிட்டு குடித்துவிட்டு இரவு தூங்கினால் தலையில் பயங்கர வழி பரவும். அப்போதே தெரிந்து கொள்ளலாம் மூளைக்கு நல்லது செய்து இருக்கும். ஆனால், கெட்டதான மதுவை அனுப்பி உள்ளீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.
0
0