பக்கா பிளான் போடும் தளபதி.. விஜய்யை தொடர்ந்து சைலண்டாக அரசியலில் களமிறங்கப்போகும் அஜித்?..
Author: Vignesh5 செப்டம்பர் 2023, 3:15 மணி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.
படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார். இதனிடையே, கடந்த சில வருடங்களாக சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்து வருகிறாராம் அஜித். விடாமுயற்சி குறித்து எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அதாவது, சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த அரசியல்வாதியான ஓபிஎஸ் அஜித்தை பார்த்துவிட்டு சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. தற்பொழுது மீண்டும் இரண்டு பேர் வெள்ளை சட்டை வேட்டி அணிந்து கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுடன் அஜித் நிற்பது போன்ற புகைப்படம் வெளியானது. அதனால் ரசிகர்கள் இவர் அரசியலில் களமிறங்க போகிறாரா என்று கேட்டு வருகின்றனர். ஆனால், அஜித்தின் அரசியல் வருகை குறித்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. மேலும், நடிகர் விஜய் பக்காவாக பிளான் செய்து அரசியலில் கால் பதிக்க உள்ளார். இந்த நேரத்தில், அஜித்தின் இந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
2
0