“இஞ்சி இடுப்பழகி” மீனாவுக்கு தான்.. 65 வயது பிரபல தமிழ் நடிகர் பேச்சு இணையத்தில் வைரல்..!

Author: Rajesh
9 July 2023, 3:05 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

meena

ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Meena Husband Vidyasagar - Updatenews360

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.

meena - updatenews360 2

தனது பிறந்த நாள் கொண்டாட்டம், தோழிகளுடன் வெளியே செல்வது, ஷூட்டிங் என நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகர் நாசர், மீனா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், தேவர் மகன் படத்தில் மீனா தான் முதல் முதலாக நடிக்கவிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்புக்கு சில நாட்கள் வந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற இஞ்சி இடுப்பழகி பாடல் இவருக்காக தான் எழுதப்பட்டது எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!