நயன், தமன்னா கூட ஹீரோவா நடிச்சப்போ கண்டுக்கல.. இப்போ வில்லன் ஆனதும் மவுசு கூடிருச்சு..

Author: Rajesh
9 July 2023, 4:00 pm

நடிகர் ஆகவேண்டும் என்கிற ஆசையோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தது.

அதன் பின்னர், குஷி திரைப்படம் இவருக்கு பெரும் ஹிட் அடித்தது. இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த இவர், நடிகராக அவதாரம் எடுத்தார். அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி, நியூ, இசை என பல திரைப்படங்களில் நடித்த போதிலும், இவருக்கு ஏதும் வெற்றி திரைப்படமாக அமையவில்லை.

ஹீரோவாக கொண்டாடப்படாத இவர், இப்போது வில்லனாக நடித்து அமோக ஆதரவை பெற்று வருகிறார். இதனால் எஸ்ஜே சூர்யாவுக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. ஸ்பைடர் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கத் தொடங்கிய இவர், மெர்சல், மாநாடு, டான் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

தற்போது இருக்கும் டாப் நடிகர்களின் படங்களில் யார் வில்லனாக நடிக்க வேண்டும் என யோசித்தால், முதலில் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் நினைவுக்கு வரும் பெயர் எஸ்ஜே சூர்யாதான். அந்த அளவிற்கு இவருடைய மவுசு கூடிவிட்டது.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 830

    8

    7