அதை ஏண்டா பண்ணோம்னு தோணுச்சு.. கிண்டல் பண்ணாங்க.. விரக்தியில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த்..!
Author: Vignesh4 May 2024, 6:52 pm
2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் இளம் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது மார்க்கெட் இல்லாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு சில பிசினஸ் செய்து வரும் ஸ்ரீகாந்த் அவ்வப்போது, மனைவி மற்றும் குடும்பத்தோடு அவுட்டிங் சென்று எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீகாந்த், தான் மிஸ் செய்த படங்களை குறித்து பேசி உள்ளார். அதில் அவர், 12 B, லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ரன், மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து, அஜித் சாருக்கு அப்பறம் நான் கடவுள் படத்தில் நான் நடிக்க இருந்தேன் ஆனால், கடைசியில் அந்த வாய்ப்பும் மிஸ் ஆகி விட்டது. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் கதை எனக்காக தெலுங்கில் எழுதப்பட்டது சில காரணங்களால் அதை பண்ண முடியாமல் போனது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்து இருந்தார்.
மேலும், சவுக்கார்பேட் படத்தை ஏண்டா பண்ணோம்னு 2வது நாளே தோணுச்சு, ஆனா ஒரு நடிகரின் நிர்பந்தம் பின்வாங்க முடியாது. நானும், ஆணவத்தில் வெளியில் போக ஆசைப்பட்டேன் முடியவில்லை. தயாரிப்பாளர் வியாபாரம் ஆகிவிட்டது என்று கூறினார் பின்னர் என் வீட்டில் என்னை கிண்டல் பண்ணாங்க, வீட்டில் இருப்பவரே கிண்டல் பண்ணும் போது எப்படி இருக்கும். ஜடை போட்டு லிப்ஸ்டிக் போட்டு அனுப்பினால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது என்று விரக்தியில் ஸ்ரீகாந்த் புலம்பி இருக்கிறார்.
1
0