விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது.. தெரிஞ்சதெல்லாம் கீர்த்தி சுரேஷ், த்ரிஷாவும் தான்; சர்ச்சையை கிளப்பிய பிரபலம்..!

Author: Vignesh
18 May 2024, 4:06 pm
keerthi suresh trisha
Quick Share

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.

goat vijay

மேலும் படிக்க: மிரட்டும் பிரமாண்டம்.. பாகுபலியையே மிஞ்சுமா கங்குவா?.. 10 ஆயிரம் பேரை கொண்டு வந்த சிறுத்தை சிவா..!

இந்நிலையில், அடுத்து, விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு, வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு இணையதளத்தில் எழுந்து வருகிறார்.

Vijay

மேலும் படிக்க: GOAT படத்தின் VFX வேலை ஓவராம்.. முக்கிய காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

இதற்கிடையில், அரசியல் விஷயங்களில் விஜய் கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பலரும் விஜயை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் விஜய் குறித்து ஒரு விஷயத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது, விஜய்க்கு தமிழும் தெரியாது தேசியமென்றால் என்னவென்றே தெரியாது. எதுவுமே தெரியாது, அவருக்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் தான். கொள்கை ரீதியாகவும், அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி எதுவுமே தெரியாது. விஜய் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். விஜய் இன்னும் அரசியல் மயப்படுத்தவில்லை. அப்படி செய்தால், யாரும் அவர் பின்னாடி வர மாட்டார்கள் என்று தமிழா தமிழா பாண்டியன் விமர்சித்து பேசியிருக்கிறார். இவர் பேசியதை விஜய் ரசிகர்கள் கடுமையாக கண்டித்து திட்டி வருகிறார்கள்.

Views: - 144

0

0