மிரட்டும் பிரமாண்டம்.. பாகுபலியையே மிஞ்சுமா கங்குவா?.. 10 ஆயிரம் பேரை கொண்டு வந்த சிறுத்தை சிவா..!

Author: Vignesh
18 May 2024, 2:54 pm
kanguva
Quick Share

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

surya

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

kanguva

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

suriya-kanguva-1-updatenews360

மேலும் படிக்க: GOAT படத்தின் VFX வேலை ஓவராம்.. முக்கிய காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் கங்குவா படத்தின் முழு அவுட்டையும் பார்த்த சூர்யா “மிகுந்த திருப்தி அடைந்திருப்பதாக” தெரிவித்திருந்தார். இந்நிலையில், கங்குவா படத்திற்காக சூர்யா வாங்கியுள்ள சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியானது. சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் நடிக்க சூர்யா ரூ. 30 கோடி முதல், ரூ. 40 கோடி சம்பளம் வங்கியுள்ளாராம். அதுமட்டுமின்றி படம் வெளிவந்து ஹிட் அடித்த பிறகு லாபத்தின் ஒரு பகுதியை ஷேர் வாங்குவார் என கூறப்படுகிறது.

kanguva

மேலும் படிக்க: உனக்கென்னமா நீ மனநோயாளி.. சுசித்ராவுக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இதில், சூர்யா இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நிகழ்காலம் பண்டைய காலம் என இரண்டு காலங்கள் குறித்த படமாக இது உருவாகி வருகிறதாம். இப்படத்தில், வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சி ஒரு மிகப்பெரிய வார் சீக்குவன்ஸை சிறுத்தை சிவா உருவாக்கியுள்ளாராம். அதற்காக பத்தாயிரம் பேரை திரையில் கொண்டு வந்து பாகுபடலியை பேன்று ஒரு சம்பவத்தை சிறுத்தை சிவா செய்ய உள்ளாராம். இப்படம் தீபாவளிக்கு விருந்தாக திரைக்கு வர இருப்பதாக முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

kanguva
Views: - 108

0

0