ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் சிம்பு? தீயாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு.?

Author: Rajesh
13 March 2022, 2:32 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவின்ர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரிவதாக அறிவித்த பிறகு ஐஸ்வர்யா தனுஷ் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வருகிறார். இதனையடுத்து, நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என கூறியுள்ளனர். இதனால் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என தெரியவந்துள்ளது.

Views: - 752

6

2