ரஜினியை காப்பியடித்த நடிகர் விஜய்… வைரலாகும் வாரிசு Deleted Scenes.. மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!!

Author: Babu Lakshmanan
4 March 2023, 10:30 am

இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

varisu -updatenews360

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் சரத்குமார், யோகிபாபு, பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், பிரகாஷ் ராஜ், ஷியாம், சங்கீதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, விடிவி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்நிலையில், ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து வருகிறது. உலகளவில் இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று நேற்று வெளிவந்தது. இதில் இடம்பெறும் ஒரு ஷாட்டில் ரஜினியை பார்த்து காப்பியடித்து விஜய் நடித்துள்ளார் என்பது போல் மீம் போட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!