மஹா சிவராத்திரி கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் ஆட்டம் போட்ட ‘லியோ’ பட நடிகை.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
19 February 2023, 8:00 pm

மாடலிங் துறையில் கலந்து கொண்டு மிஸ் தமிழ் நாடு பட்டம் வென்றவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். சன் டிவியில் ‘ஸ்டார் வார்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர், ‘நோட்டா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நல்ல ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற இவர்,பல வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார். விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி என அவ்வப்போது மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இதையடுத்து OTTக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் இவர், பெரிய படங்கள் மற்றும் சீரியல்களில் தென்படாத நிலையில், தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள மற்றும் புது வாய்ப்புகளுக்காகவும் தனது கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.

தற்போது, லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இவர் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மஹா சிவராத்திரிக்காக காளஹஸ்திக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…