மயில்சாமி மறைவு தற்செயல் அல்ல… நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் சொன்ன தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 9:31 am
Rajni Mayil - Updatenews360
Quick Share

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். மயில்சாமியின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மயில்சாமியின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நடிகர் மயில்சாமி தீவிரமான சிவ பக்தர் என்பதால் விண்ணதிரும் சிவ வாத்தியங்களுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவரது உடலுக்கு நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மயில்சாமி இழப்பு சினிமா உலகிற்கு பேரிழப்பு, அவர் எம்ஜிஆர் ரசிகரை தாண்டி தீவிர சிவ பக்தர், என்னுடைய நண்பர் என கூறினார்.

மேலும் சிவராத்திரியன்று அவர் மறைந்தது தற்செயல் அல்ல, கடவுளின் சித்தம் என்று கூறினார்.

Views: - 365

1

0