செம ஆளு மேடம் நீங்க… இரட்டை அர்த்த பாடலுக்கு கனிகா கொடுத்த Face Reaction..!!

Author: Babu Lakshmanan
27 September 2022, 2:10 pm

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. தற்போது கோப்ரா படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது ரஜினி படத்தின் படையப்பா பாடலில் இடம்பெற்றுள்ள இரட்டை அர்த்தமுள்ள வரிகளுக்கு ரியாக்ஷன் கொடுத்து, ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!