பழம்பெரும் மூத்த நடிகை ஆஷா பரேக்கிற்கு “தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு..!

Author: Vignesh
27 September 2022, 2:42 pm

பழம் பெரும் நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவின் பழம் பெரும் நடிகைகளில் ஒருவர் ஆஷா பரேக். குஜராத்தை பூர்விகமாக கொண்டவர். 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி வெற்றி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை ஆஷா பரேக்.

பாலிவுட் சினிமாவில் செல்வாக்கு மிகுந்த நடிகையாகவும் வலம் வந்தவர் ஆஷா பரேக். அதோடு அதிக சம்பளம் பெற்ற பாலிவுட் நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆஷா பரேக். அக்கால டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள ஆஷா பரேக், 1999ஆம் ஆண்டு வெளியான Sar Aankhon Par படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் ஆஷா பரேக்.

ஆஷா பரேக்கிற்கு 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. தற்போது 70 வயதான ஆஷாவுக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?