ஆன்டி வயசாகியும் குறையாத அழகு… 45 வயது நடிகை உடல் எடை வேகமாக குறைத்த ரகசியம்!

Author: Shree
21 September 2023, 2:03 pm
manju warrier
Quick Share

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

Manju Warrier - updatenews360

தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு 45 வயதாகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு வியக்க வைப்பார்.

Manju Warrier - updatenews360

இந்நிலையில் தற்போது 45 வயதாகும் மஞ்சு வாரியார் வேக வேகமாக உடல் எடை குறைத்ததன் ரகசிய டிப்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்த மஞ்சு வாரியர் அதனை குறைக்க எண்ணெய் கலக்காத உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். அத்துடன் நடனம் ஆடுவதில் ஆர்வம் கொண்ட அவர் அதன் மூலமாகவே உடல் எடையை குறைத்தாராம். அதோடு, யோகா, உடற்பயிற்சி நடைப்பயிற்சி என தினம் தினம் உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்தி செயல்பட்டதால் தான் இந்த வயதிலும் இளமையாக தோன்றுகிறாராம்.

Views: - 140

0

0