மீண்டும் நாக சைதன்யா உடன் இணைந்த சமந்தா?.. குவியும் வாழ்த்துகள்… குழப்பம் ஏற்படுத்திய பதிவு..!

Author: Vignesh
21 September 2023, 1:45 pm
Quick Share

மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

samantha - updatenews360

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார்.

முன்னதாக சமந்தா அவரது இன்ஸ்டா கணக்கில் நாகசைதன்யா குறித்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கி இருந்தார். ஆனால், தற்போது நாகசைதன்யா அவர்களுக்கு சமந்தா முத்தம் கொடுத்த போட்டோ ஒன்றை இப்போது, சமந்தா Unarchive செய்திருக்கிறார். அதனால் அந்த போட்டோ தற்போது சமந்தாவின் பக்கத்தில் எல்லோருக்கும் காட்டுகிறது. அதனால், அவர்கள் மீண்டும் இணைகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. அதை ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

samantha - updatenews360

Views: - 158

0

0