மகள் சாவுக்கு விஜய் ஆண்டனியும் ஒரு காரணம்…. இந்த நேரத்தில் கூடவா இப்படி பேசுறது?

Author: Shree
21 September 2023, 1:41 pm
bayilvan
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும் மிகச்சிறந்த நடிகருமான விஜய் ஆண்டனி தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாது திரைத்துறையினரிடமும் அன்பாக பழகும் சாந்த குணமுடையவர். இவர் சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பின்னர் ஹீரோவாக நான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

Vijay Antony - Updatenews360

அதன் பின்னர் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகினார். இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர் இதில் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினர் மத்தியில் பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மீரா கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதற்காக அவர் கடந்த 6 மாத காலமாக சிகிச்சை எடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

Vijay_Antony_updatenews360 2

அவர் பள்ளியில் நன்கு படிக்கும் மாணவி , மிகவும் திறமையானவர், தைரியமானவர், மேடைகளில் தைரியமாக பேசக்கூடியவர். பல கலைகளில் தன்னை ஈடுபடுத்தி திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி இருக்கும் மீரா என் தவறான முடிவை எடுத்தார் என்று அவரது ஆசியர்கள் மற்றும் நண்பர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மீரா தன் குடும்பத்தினரோடு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு `11 மணிக்கு தூங்க சென்றுள்ளார். சரியாக 3 மணியளவில் அவர் தூக்கிட்டு இறந்துள்ளார். அந்த கடைசி இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்தது? அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என பல கோணங்களில் போலீசார் விசாரித்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற மன அழுத்தத்தில் இருக்கும் நபர்கள் தற்கொலை செய்யும் முடிவில் இருக்கும்போது கடைசி நிமிடங்களில் அங்கும் இங்குமாக நடந்திருப்பார், மனம் குமுறி அழுதிருப்பார். தனக்கு பிடித்த நபர்களை விட்டு செல்வதை நினைந்து ஆழ்மனதில் வருந்திருப்பார்கள். எண்ணங்கள் நிலையாக இருந்திருக்காது. படபடப்பாக எண்ணத்துடன் ஒரு வித குழப்பத்தில் மரணித்திருப்பார்கள் என மனநல ஆலோசர்கள் கூறுகிறார்கள். மேலும் அவரது அறையில் தூக்கம் மாத்திரைகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மீராவின் மரணம் குறித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், போலீசார் மீராவின் செல்போனை பரிசோதித்து பார்த்தபோது மீரா கடைசியாக மனநல மருத்துவரை தொடர்பு கொண்டு அப்பாயின்மென்ட் கேட்டுள்ளார். மருத்துவர்களும் ஒரு குறிப்பிட்ட நாளை கொடுத்துள்ளனர். ஆனால், அதற்குள் அவர் மன அழுத்தம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

எனவே பிள்ளை நல்ல சூழலில் பாசிட்டீவ் ஆன மனநிலையில் வளர வேண்டும் சில விஷயங்கள் அப்படியே பலித்துவிடும். அப்படித்தான் மீராவின் சாவிற்கும் ஒரு விதத்தில் காரணமாக இருந்தது விஜய் ஆண்டனியே தான். ஆம், அவர் தன் படங்களில் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என டைட்டில் வைத்திருக்கிறார். அதுவே ஒரு வித தாக்கத்தை மனதிற்குள் ஏற்படுத்தியிருக்கலாம் என பயில்வான் கூறியுள்ளார். இதனை கேட்டு இப்போ கூடவா இப்படி குறை சொல்லி பேசுவீங்க என விமர்சித்துள்ளனர் நெட்டிசன்ஸ். ஆனால் சிலர் பயில்வான் சொல்வது சரி தான் யோசித்து பாருங்கள் என கூறியுள்ளனர்.

Views: - 624

0

0