நடிகையிடம் அந்த வார்த்தை சொன்ன விஜய்… பேச்சே வராமல் அதிர்ந்துப்போன அழகு நடிகை!

Author: Shree
21 September 2023, 1:15 pm
vijay prinka mohan
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கும் விஜய் டாப் ஹீரோ அந்தஸ்தில் இருந்து வருகிறார். இவரது படங்கள் வெளியாகும் நாள் திருவிழா கோலம் போன்று காட்சியளிக்கும். உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாக இருந்து வரும் விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான படத்தில் நடிப்பதில் அக்கறை கொண்டிருப்பார்.

priyanka mohan

விஜய்யின் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது தான் சினிமாவில் நுழையும் பல பேரது கனவாக இருக்கிறது. இதற்கு நடிகைகளும் விதி விலக்கல்ல. அப்படித்தான் நடிகை பிரியங்கா மோகன் விஜய் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது அவர் நடித்த டான் படத்தின் ஷூட்டிங்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடந்துள்ளது. அப்போது பிரியங்கா விஜய்யிடம் சென்று போட்டோ எடுத்துக்கொண்டாராம். அந்த நேரத்தில் விஜய் பிரியங்கா மோகன் நடித்த டாக்டர் படத்தில் அவரது நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக கூறி பாராட்டியுள்ளார்.

Priyanka Mohan -updatenews360

மேலும் தெலுங்கில் அவர் நடித்து வெளியான ஸ்ரீகாரம் படத்தில் ஹே அப்பாயி என்ற பாடலில் சிறப்பாக நடனமாடியதாகவும் அடிக்கடி அதை பார்ப்பேன் என்றும் விஜய் கூறினாராம். விஜய் அப்படி சொல்லி கேட்டதும் பிரியங்கா மோகனுக்கு ஒரு நிமிஷம் பேச்சே வரவில்லையாம். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Views: - 538

2

0